இலக்கியம்

நூல் நோக்கு: பொதுவுடமை எனும் கவிதை !

செய்திப்பிரிவு

கம்யூனிஸத் தத்துவத்தை உருவாக்கியவரான கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு இது. கார்ல் மார்க்ஸின் இளமைப் பருவத்தையும் அவரது உலகக் கண்ணோட்டம் வளர்ந்த விதத்தையும் கவித்துவமாக இது வர்ணிக்கிறது. இளம் மார்க்சின் கவிதைகள் இந்த நூலின் இன்னொரு சிறப்பு. மார்க்ஸின் இலக்கிய உணர்வு அவரது பொருளாதாரப் படைப்புகளிலும் வெளியாவதையும் வயதான காலத்தில் மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்களில் அது தொடர்வதையும் அழகாகப் படம் பிடிக்கும் நூல் இது. ஒவ்வொரு முறை மனைவியை முத்தமிடும்போதும் பிராமணர்களின் மறுபிறவித் தத்துவத்தை உணர்வதாக எழுதிச்செல்வார் மார்க்ஸ்.

மார்க்ஸ் வாழ்ந்த காலத்தின் தத்துவக் கண்ணோட்டங்களைப் பற்றிய அறிமுகம் இதில் உண்டு. மார்க்ஸ் செய்த தத்துவச் சாதனைகளையும் எளிமையாக அறிமுகப்படுத்தும். இயற்கையும் சமூகமும் இயங்கும் விதத்தில் உள்ள ஒற்றுமையை வாசகர்கள் இதில் உணர்வார்கள். வாசகர்களின் கண்ணோட்டத்தை உலகளாவிய அளவுக்கு விரிவுபடுத்தும் நூல் இது!

- நீதி

SCROLL FOR NEXT