இலக்கியம்

விடுபூக்கள்: டப்ளின் பரிசு வென்ற இந்திய எழுத்தாளர்

செய்திப்பிரிவு

டெல்லியில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய அகில் ஷர்மா எழுதிய ‘ஃபேமிலி லைஃப்' என்ற நாவல் இந்த ஆண்டுக்கான டப்ளின் பரிசை வென்றுள்ளது. 1 லட்சம் ஈரோ பரிசுத் தொகை கொண்டது இந்தப் பரிசு. தன் சொந்தக் கதையை மூலமாகக் கொண்டு ‘ஃபேமிலி லைஃப்' நாவலை அவர் எழுதியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. குடும்ப வாழ்க்கையின் மென்மையான உணர்வுகளை எளிய தொனியில் அவர் பதிவுசெய்துள்ளார். அமெரிக்கா, இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதுக்கும் இவரது நாவலுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது. சென்ற ஆண்டு, 40 ஆயிரம் பவுண்ட் மதிப்பு மிக்க இங்கிலாந்து நாட்டின் உயரிய இலக்கிய பரிசுகளில் ஒன்றான ஃபோலியோவையும் இந்த நாவல் வென்றுள்ளது.

SCROLL FOR NEXT