இலக்கியம்

பிறமொழி நூலறிமுகம்: மனிதரை எடைபோட்ட மண்ட்டோ

வீ.பா.கணேசன்

சாதத் ஹசன் மண்ட்டோவின் எந்தவொரு எழுத்தும் காலம் கடந்து நிலைப்பது என்பதை உறுதிப்படுத்த வந்துள்ளது இந்நூல். பார்த்துப் பழகிய, பல்வேறு தொழில்களில் பிரகாசித்து வந்த 11 நபர்களைப் பற்றிய சொற்சித்திரங்களின் தொகுப்பு. நடிகர்கள் அசோக் குமார், நர்கீஸ், நூர்ஜஹான், நஸீம், பத்திரிக்கையாளர் பாபுராவ் பட்டேல் போன்றவர்களைப் பற்றி மண்ட்டோவின் மிக வெளிப்படையான, அப்பட்டமான, மேல்பூச்சற்ற எழுத்தை இதில் நாம் காணலாம். தன் அமில எழுத்தினால் வாழ்க்கையைப் பற்றிய சித்திரத்தைச் சிறுகதைகளாய் நமக்கு வழங்கிய மண்ட்டோ, மனிதப் பண்பு என்ற அடிப்படையில் எப்படி சீர்தூக்கிப் பார்ப்பது என்பதை நமக்கு இதன் மூலம் உணர்த்துகிறார். அவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கிவரும் நந்திதா தாஸின் முன்னுரை இதற்கு மேலும் மெருகூட்டுகிறது.

சாதத் ஹசன் மண்ட்டோ த ஆர்ம்சேர் ரெவல்யூஷனரி அண்ட் அதர் ஸ்கெட்சஸ் உருதுவிலிருந்து ஆங்கிலத்தில்: காலித் ஹசன். அறிமுகம்: நந்திதா தாஸ், விலை: ரூ. 325,

வெளியீடு: லெஃப்ட் வேர்ட் புக்ஸ். கிடைக்குமிடம்: பாரதி புத்தகாலயம், சென்னை-18. போன் : 044-24332924.

SCROLL FOR NEXT