மனித உரிமைகள் குறித்தும் சமூகப் பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிவருபவர் பா. பிரபாகரன். இவரது ‘அம்பேத்கரின் பெண்ணியம்’, ‘அம்பேத்கரும் அவதூறுகளும்’, ‘தமிழகத்தின் மனித உரிமைகள்’, ‘பரட்டையின் தலித் சமயம்’ உள்ளிட்ட நூல்கள் பரவலான கவனம்பெற்றவை.
அம்பேத்கரை அடுத்த தலைமுறைக்கு முறையான வழியில் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நூல் இது. தனிமனித வழிபாட்டுத் தன்மையை விடுத்து, ஓர் ஆளுமையை அவர் வாழ்ந்த வாழ்க்கையை அப்படியே அறிமுகப்படுத்தி அதன் மூலம் புதிய தலைமுறைக்கு அந்த ஆளுமையின் முக்கியத்துவத்தைத் துலக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது.
அம்பேத்கரின் சமூக, அரசியல், வரலாற்றுப் பார்வையை நேர்மறையான கண்ணோட்டத்தில் அணுகியிருக்கும் இந்நூல் அம்பேத்கரின் ஆளுமையைப் புரிந்துகொள்வதில் தள்ளாடும் கலங்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம்.
அம்பேத்கர்: உருவும் மறு உருவாக்கங்களும்
பா.பிரபாகரன்
விலை: ரூ.90
பக்.128
வெளியீடு:
கருத்து=பட்டறை
மதுரை-625006
கைபேசி: 98422 65884