இலக்கியம்

நூல் நோக்கு: தலித் மக்கள் செல்ல வேண்டிய திசை

ஆதி

மோடி விளம்பரப்படுத்தும் நவீன குஜராத் எனும் முகத்திரை மீண்டும் ஒரு முறை கிழிவதற்குக் காரணமாக இருந்தது உனாவில் நான்கு தலித் இளைஞர்களைப் பசுப் பாதுகாவலர்கள் பொது இடத்தில் வைத்து அடித்த சம்பவம்.

அதைத் தொடர்ந்து உனாவில் மிகப் பெரிய தலித் எழுச்சி நிகழ்ந்தது. ‘மாட்டின் வாலை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு நிலங்களைத் தாருங்கள்’ என்பதே அந்த எழுச்சியின் கோஷம். அந்த எழுச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் ஜிக்னேஷ் மேவானி. அவருடைய மூன்று நேர்காணல்களின் தொகுப்பே இந்த நூல்.

மொழிபெயர்ப்பு லீனஸ். தலித் மக்கள் தங்களுக்கான அரசியல் அடையாளப் போராட்டங்களில் ஈடுபடுவது, திரள்வது மட்டும் பலன் தராது. தங்களைச் சுரண்டும் சாதிய அமைப்புக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடுவதைப் போலவே, பொருளாதார ரீதியில் சுரண்டப்படுவதற்கு எதிராக வர்க்க ரீதியிலும் போராட வேண்டிய தேவையின் அவசியத்தை ஜிக்னேஷ் வலியுறுத்துகிறார்.

இந்தியாவில் இன்றைக்கு ஒரே நிலையில் உள்ள இஸ்லாமியர்களும் தலித்களும் இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக இணைந்து போராட வேண்டும்; நில உரிமை மட்டுமே சாதிய ஒடுக்குமுறையை ஒழிக்கும்; தலித் மக்களுக்கு நிரந்த வாழ்வாதாரத்தைத் தரும் என்பதையே அவர் தீர்வாக முன்வைக்கிறார்.

சாதி ஒழிப்பு அரசியலின் புதிய எழுச்சி,

ஜிக்னேஷ் மேவானி (தமிழில்: லீனஸ்), விலை: ரூ. 20

வெளியீடு: ரெட் புக் பதிப்பகம், சென்னை - 17.

தொடர்புக்கு: 98423 91963

SCROLL FOR NEXT