இலக்கியம்

புரட்சி பேசிய வெள்ளுடை அருளாளர்

செய்திப்பிரிவு

பால்யத்தில் தன் மனதில் பதிந்த வள்ளலாரைப் பற்றி பழ. நெடுமாறன் எழுதியுள்ள இந்நூல் இராமலிங்க அடிகள் குறித்து இந்தத் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. சாதி, சமயப் பூசல்களை ஒழித்து சமதர்ம சமுதாயம் அமைக்க வள்ளலார் முயன்ற வரலாற்றை மிக எளிமையாக இந்நூல் எடுத்துரைக்கிறது.

வள்ளலார் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு அவரைப் பற்றிய செய்திகளை அக்கறையுடன் தெரிவிக்கும் விதம் நன்று. வள்ளலாரைப் பற்றி மு.வ., ம.பொ.சி. போன்றோர் எழுதியிருக்கும் தகவல்களையும் இந்நூல் பெட்டிச் செய்திகளாக உள்ளடக்கியிருக்கிறது.

சாதி, சமய மறுப்பை முன்வைத்தவர், பெண் விடுதலையை விரும்பியர், தமிழ் மொழிப் பற்றாளர், அருளாளர் எனப் பலமுகம் கொண்ட வள்ளலாரை அறிவதற்கான நுழைவாயிலாக இந்நூல் விளங்குகிறது.

-ரிஷி

SCROLL FOR NEXT