தென்னகத் திரைப்பட இயக்குநர்களில் தலைசிறந்தவரான அடூர் கோபாலகிருஷ்ணன் பற்றிய மிகச் சிறந்த அறிமுக நூல் இது. அசாம் மாநிலத்தில் ஒரு கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும் திரைப்பட விமர்சகராகவும் இருக்கும் பார்த்தஜித் பரூவா, 1972 முதல் இன்றுவரை 11 திரைப்படங்களை மட்டுமே உருவாக்கியுள்ள அடூரின் உருவாக்கத்தை, வளர்ச்சியை அவரது திரைப்படங்களின் வழியாகவே நம்மிடம் விவரிக்கிறார். பெண்ணின் புத்துயிர்ப்பை மண்ணின் மணத்தோடு பதிவு செய்யும் அடூரின் திரைப்படங்கள் இந்திய திரைப்பட வரிசையில் தனித்தன்மை கொண்டவை. அவரது கனவுப் படம் எது என்ற கேள்விக்கு, “ மக்கள் பார்வைக்கு வந்த எனது ஒவ்வொரு படமுமே நனவாகிய எனது கனவுகள்தான்!” என்ற அடூரின் பதில் இன்றைய இந்திய திரைப்பட உலகில் மாற்றுத் திரைப்படங்களின் நிலையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
-வீ. பா. கணேசன்