கிச்சுக்கிச்சுத் தாம்பலம், நொண்டிக்கோடு, கூட்டாஞ்சோறு, பூப்பறிக்க வருகிறோம் போன்ற உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரும் விளையாட்டுக்களை விளையாடிய சிறுவர்கள், இன்று கையில் பெற்றோர்களின் ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு ஆங்ரி பேர்ட்ஸ், டெம்பிள் ரன் போன்ற விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள்.
இதனால், கை, கண்கள், மூளை போன் றவை பாதிக்கப்படுகின்றன. உடல்பருமன் பிரச்சினை வேறு. குழந்தைகளின் கற் பனைத் திறனை இந்த விளையாட்டுக்கள் விரிவுபடுத்துவதில்லை. ஸ்மார்ட்ஃபோன் விளையாட்டுக்களிடம் நாம் பறிகொடுத்த கிராமத்து விளையாட்டுக்களைத்தான் ‘குலைகுலையா முந்திரிக்கா’ என்ற நூலில் குமரி ஆதவன் பதிவுசெய்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளுடன் குமரிப் பிரதேச விளையாட்டுக்களும் இந்த நூலில் உண்டு. அடுக்குவரை, தவளைச்சாட்டம், அக்கக்கா சிவிக்கோரி, ஓணப்பந்து என்றெல்லாம் விதவிதமான விளையாட்டுக்கள் நம்மை அதிசயிக்க வைக்கின்றன. எப்படிப்பட்ட விளையாட்டுக்களை நாம் இழந்துகொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப் பெருமூச்சுவிட வைக்கும் நூல் இது.
குலைகுலையா முந்திரிக்கா தமிழக கிராமிய விளையாட்டுகள்
குமரி ஆதவன்
விலை: ரூ. 100
வெளியீடு: களரி வெளியீட்டகம், நாகர்கோவில் 629 001.
தொலைபேசி: 04652-220742