இலக்கியம்

ஓவியக் கண்காட்சி உள்ளொளியின் அறிவியல்

செய்திப்பிரிவு

ஓவியர் ஆர்.வி. ராஜேஷின் ஓவியங்கள் ‘உள்ளொளியின் அறிவியல்’(Science of Insight) என்ற தலைப்பில் சென்னை தக்‌ஷிணசித்ராவின் காதம்பரி ஓவியக் காட்சி அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சென்னையைச் சேர்ந்த ஓவியரான இவர் காட்சித் தொடர்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 2011-ம் ஆண்டிலிருந்து இவருடைய படைப்புகள் ஓவியக் காட்சிகளில் இடம்பெற்றுவருகின்றன. அவருடைய படைப்புகள் பெரும்பாலும் கலப்பு ஊடகங்களில் (Mixed media) உருவாக்கப்படுகின்றன. தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு விருது, மும்பை பிரஃபுல்லா ஆர்ட் ஃபவுண்டேஷன் விருது போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார் இவர்.

இடம்:

காதம்பரி ஓவியக் காட்சி அரங்கு, தக்‌ஷிணசித்ரா, முட்டுக்காடு.

நாட்கள்:

17 30, ஜூன்- 2017, (செவ்வாய் விடுமுறை)

நேரம்:

காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை

- கனி

SCROLL FOR NEXT