இலக்கியம்

இரண்டு கடல்களின் துயர்!

ஆசை

சமீபத்தில் எண்ணூரில் கொட்டிய கச்சா எண் ணெயின் பாதிப்பு இன்னும் நம்மை விட்டு நீங்கவில்லை. நீங்குவதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்றும் தெரியவில்லை. இதுபோன்ற நிகழ்வுகளெல்லாம் இலக்கியப் பதிவுகளாவது மிகவும் அவசியம். நீடித்த பாதிப்பைச் சொல்வதற்கு நீடித்த ஊடகம் என்றால் அதில் இலக்கியம்தான் முதன்மையானது. குறிப்பாகக் கவிதைகள்!

பருவநிலை மாற்றம், புவிவெப்ப மாதல் போன்றவையெல்லாம் ஏதோ ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை வந்து தாக்கியழிக்கப்போகும் வால் நட்சத்திரங்கள் போன்றவை அல்ல. நம் கண்முன்னே அப்பட்டமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் அழிவுகள். உண்மையில் பேரழிவு! அந்தப் பேரழிவு குறித்த பிரக்ஞை நம் உணர்விலும் இலக்கியத்திலும் ஊடுருவ வேண்டும். இன்றைய தமிழ்க் கவிதைகளில் அரசியல் பிரக்ஞை என்பது குறிப்பிடத்தக்க அளவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், சுற்றுச் சூழல் குறித்த பிரக்ஞை போதுமான அளவுக்கு ஏற்படவில்லை என்றே சொல்ல வேண்டும். சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள், அதன் மீது மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் (நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்) போன்றவையும் அரசியல்தான். இந்தச் சூழலரசியல் குறித்தும் தமிழ்க் கவிதைகள் மேலும் கவனம் செலுத்த வேண்டும்.

ஆங்கிலப் பத்திரிகையான ‘தி கார்டியன்’ இதழின் முன்னாள் ஆசிரியர் ஆலன் ரஸ்பிரிட்ஜர் சுற்றுச் சூழல் குறித்த அக்கறை கொண்டவர். ‘தி கார்டியன்’ நிறுவனம் முன்பு புதை படிவ எரிபொருளில் நிறைய முதலீடு களைச் செய்திருந்தது. ஆலன் ரஸ்பிரிட்ஜரின் வலியுறுத்தலின் பேரில் நிர்வாகம் அந்த முதலீடு களைத் திரும்பப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக ஆலன் ரஸ்பிரிட்ஜர் மேற்கொண்ட முன்னெடுப்புதான் ‘நிலத்தடியிலேயே இருக்கட்டும்’ (Keep it in the Ground). இந்தப் பிரச் சாரம் சூடுபிடிக்கவே கவிஞர்கள், நடிகர்கள், செயல்பாட்டாளர்கள் எனப் பலரும் இந்த பிரச்சாரத்தில் ஆர்வ மாகப் பங்கெடுத்தார்கள். இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பருவநிலை மாற்றம் குறித்து இருபது கவிஞர்களின் கவிதைகளைத் தொடர்ச்சியாக ‘தி கார்டியன்’ இதழில், பிரிட்டனின் அரசவைக் கவிஞர் கேரல் ஆன் டஃபியின் பொறுப்பில் வெளி யிட்டார்கள். 2015-ல் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது. என்றாலும், அந்தத் தொடரில் இடம்பெற்ற ரஷேல் போஸ்ட் எழுதிய ‘மவுனக் கடல்’ (Silent Sea) என்ற கவிதை, எண்ணூரில் நிகழ்ந்த சுற்றுச்சூழல் பேரழிவை நினைவுறுத்துவதால், இங்கே இடம்பெறுகிறது.

மவுனக் கடல்

ரஷேல் போஸ்ட்

மவுனக் கடலை

முதன்முதலில்

உடைத்து உள்நுழைந்தவர்கள் நாம்

எஸ்.டி. கோலிரிட்ஜ்

மற்றுமொரு கலம் கொட்டுகிறது

தனது நெடுநேரச் சவைத்தலின் குரோமியத்தை

ஒரு மைல் மூன்று மைல்களாய்க் கிளைபரப்பும்படியும்

மீண்டும் மும்மடங்காய்ப் பெருகும்படியும்

பாறையைப் போர்த்தி மூடி எண்ணெய்க்கு அடியில்

சுவாசிக்க முடியாது எதனாலும், கருஞ்சவ்வின்

எண்ணெய்ப் படலத்தைப்

பார்வையில் பதிக்கவும் முடியாது.

புவிக் கலத்தின் கூட்டை உடைத்து

முதலில் பிளந்தவர்கள் நாமே,

நம் மூடச் சிரத்தையென்பது

பெரிதும் போலித் தங்கத்தால்

பொங்கி வழியுமொரு உலோகவியல்

பேச்சு, பேச்சு, நம்மால்

முடிந்ததெல்லாம் பேச்சுதான்

அண்ட வெளியிலொரு கப்பல்,

சிந்தனையின்மையும் உணர்வின்மையும்

சேர்ந்து செலுத்தும் கப்பல்

ஏதும் பேசுவதில்லை சுத்தமாக.

SCROLL FOR NEXT