மக்களுக்குத் தொண்டு செய்வதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் தலையாய கடமை. ஆனால், அந்தக் கடமையிலிருந்து தவறும் அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளைப் பொதுத்தளத்தில் விவாதிக்கத் தூண்டும் செயலை, சமூக ஆர்வமிக்க தன்னார்வலர்கள் செய்துவருகிறார்கள். குழந்தைத் தொழிலாளர் நல்வாழ்வு, பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்று செயல்படும் பல்லாயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நம்மிடையே உள்ளன.
இந்தியாவில் 50 ஆயிரம் என்.ஜி.ஓ-க்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த என்.ஜி.ஓ-க்களுக்கான வெளிநாட்டு நிதியாக ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருகிறது. இந்த நிதி யாரிடமிருந்து யாருக்கு வருகிறது, இதன் பின்னணி என்ன என்கிற உண்மைகளைத் தகுந்த ஆதாரங்களோடும் குறிப்புகளோடும் பதிவுசெய்துள்ளார் பி.ஜே.ஜேம்ஸ். மொழிபெயர்ப்பு நூல் என்கிற நெருடல் இல்லாமல் வாசிக்க முடிவது இந்நூலின் மற்றொரு சிறப்பு.
- மு.முருகேஷ்
அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் உண்மை சொரூபம்
பி.ஜே. ஜேம்ஸ்
தமிழில்: கமலாலயன், சுவிதா முகில், சத்தியநாராயணன்
விலை:ரூ. 230
புதுமை பதிப்பகம், சென்னை-05
7200260086