கவிஞர் ஆத்மாநாம் நினைவைக் கொண் டாடும் வகையில் மெய்ப்பொருள் பதிப்பகம் ஆத்மாநாம் அறக்கட்டளையைக் கடந்த ஆண்டு துவங்கியது. கவிஞர் கலாப்ரியாவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு ஆண்டு தோறும் கவிஞர் ஆத்மாநாம் பெயரில் ரூ. 25,000 பரிசுத்தொகையும் விருதும் வழங்கிவருகிறது.
சென்ற ஆண்டு (2015) கவிஞர் இசைக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கவிஞர் மோகனரங்கனுக்கு வழங்கப்படுகிறது.
கவிஞர் கலாப்ரியா (நெறியாளர்: தேர்வுக் குழு), கவிஞர் சுகுமாரன், பேராசிரியர் ஆர்.சிவகுமார் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவின் முடிவுப்படி இந்த ஆண்டுக்கான ‘கவிஞர் ஆத்மாநாம் விருது’ கவிஞர் க.மோகனரங்கனுக்கு அளிக்கப்படுகிறது. அவர் எழுதிய ‘மீகாமம்’ தொகுப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.