பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் ‘அக்கா’ நாவலைத்தான் சமீபத்தில் படித்தேன். வலி நிறைந்த வாழ்வின் முழுப் பக்கங்களையும் நாவல் புரட்டிக் காட்டுகிறது. அக்கா, மச்சான் கூடவே பனையேறிகளுடன் நம்மையும் அழைத்துப்போகிற வல்லமையான கதைசொல்லியாக இருக்கிறார் க.பஞ்சாங்கம். பனையேறிகள் வாழ்க்கையின் வலியைச் சொற்கள் வழியாக அற்புதமாக உணர வைக்கிறார் பஞ்சாங்கம்.
சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் படைப்பதற்கான மூன்று மெய்மைகளுள் ‘ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்’ என்பதும் ஒன்று. இதில், ‘ஊட்டும்’ எனும் தலைப்பில் நாவலொன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். என் அப்பா உயிரோடிருக்கும்போது வரைபடமாகத் தந்த குறிப்புகளிலுள்ள விஷயங்களே நாவலின் மையம்.