'தமிழர் பண்பாடும் தத்துவமும' என்ற இந்நூல் பேராசிரியர் நா. வானமாமலை ‘ஆராய்ச்சி’ என்னும் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள ‘முருக-ஸ்கந்த இணைப்பு’ என்ற கட்டுரை தமிழரின் (திராவிடரின்) முருக வழிபாடும் வடஇந்தியரின் (ஆரியரின்) ஸ்கந்த வழிபாடும் இணைந்த வரலாற்றை ஆதாரங்களோடு எடுத்துரைக்கிறது. அதேமாதிரி, ‘பரிபாடலில் முருக வணக்கம்’ என்ற கட்டுரை, மக்கள் உலக இன்ப வாழ்க்கையைப் பெறுவதற்காகவே முருகனை வழிபட்டனர் என்ற கருத்தை விளக்குகிறது. மணிமேகலை காப்பியத்தை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் பௌத்தம் வளர்ந்த வரலாற்றை ‘மணிமேகலையில் பௌத்தம்’ என்ற கட்டுரை விரிவாக அலசுகிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் காணப்படும் பொருள்முதல்வாதக் கருத்துகளின் தாக்கம், தொன்மங்களைப் பின்னணியாகக் கொண்டு கலை வரலாறு எப்படி உருவாகிறது போன்றவற்றையும் இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் விளக்குகின்றன. தத்துவப் பின்புலத்தில் தமிழர்களின் பண்பாட்டைப் புரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும்.
தமிழர் பண்பாடும் தத்துவமும்
நா. வானமாமலை
விலை: ரூ. 145
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்,
சென்னை - 600 024.
தொடர்புக்கு: 044- 24815474