திருப்பூரில் புத்தகத் திருவிழா!
சென்னை, பெரம்பலூர் புத்தகக் காட்சிகளைத் தொடர்ந்து நேற்று திருப்பூரில் 14-வது புத்தகக் காட்சி தொடங்கியிருக்கிறது. 12-ம் தேதி வரை நடைபெறும் திருவிழா இது. காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும். திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட்டும் பாரதி புத்தகாலயமும் இணைந்து நடத்தும் இந்தப் புத்தகக் காட்சி காங்கயம் சாலையில் உள்ள பத்மினி கார்டனில் நடைபெறுகிறது. 151 புத்தக அரங்குகள் இந்தப் புத்தகக் காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன. பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என்பதுடன் வழக்கமான 10% சதவீதத் தள்ளுபடியும் உண்டு. திருப்பூர் மக்களும் சுற்றுவட்டார மக்களும் இந்தப் புத்தகத் திருவிழாவை நோக்கி நேற்றிலிருந்து படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்!
*
ஒரு ஃபேஸ்புக் பதிவு!
எம்.டி.எம். என்று அழைக்கப்படும் எழுத்தாளர் எம்.டி. முத்துக்கு மாரசாமி ஃபேஸ்புக் பதிவிலிருந்து… "டிவிட்டரில் சல்மான் ருஷ்டி சுவாரஸ்ய மாய் உரையாடுகிறார். ஒருவர் அவ ருடைய நாவல் அரிசி அவல் சாப் பிடுவதைப் போல இருந்தது என்று சொல்லப்போக, 'அட! என்னுடைய நாவல்களை அரிசி பதார்த்தங்களோடு யாரும் ஒப்பிட்ட தில்லையே' என்றார். எனக்கு 'மூர்ஸ் லாஸ்ட் சை' கூட்டாஞ்சோறு, 'கிரவுண்டு பினீத் ஹெர் ஃபீட்' ஆறிய பழங்கஞ்சி, 'என்சான்ட்ரஸ் ஆஃப் ஃப்ளோரன்ஸ்' நெய் மணக்கும் சாம்பார் சாதம் என்று சொல்ல ஆசை. கர்நாடக இசையை உணவு பதார்த்தங்களோடு ஒப்பிடும் எவ்வளவு நீண்ட விமர்சன பாரம்பரியம் நமக்கு இருக்கிறது! நம்மிடமா விளையாட்டு?"
*
ஓட்டுநர் கதைகள்!
அறிவியல் புனைகதை எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி, கார் ஓட்டுநர்களுடனான தனது அனுபவங்களை வைத்து எழுதிய பத்துக் கதைகளை 'வலவன்' என்ற தலைப்பில் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 'வலவன்' என் றால் தேர்ப்பாகன் என்று பொருள். 'சங்க காலப் பாடல்களில் தேரோட் டிக்குத் தலைவன் சொல்வதாக பரவ லாக வரும்… பதிலுக்குத் தேரோட்டி பேசினதாக வாசித்ததில்லை. காரோட்டிகளின் குரல் இப்போது கேட்கிறது. செல்லும் பயணங்களில் அவர்களிடம் நடத்திய உரையாடல் களின் தொகுப்புதான் எனது இந்த 'வலவன்' கதைத் தொகுப்பு. இக் கதையில் வலவர்கள் இந்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வந்திருக்கிறார்கள்' என்கிறார்.
*
கரண் ஜோர்!
திரையுலகிலும் எழுத்தாளர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. சமீபத்திய வரவாக கரண் ஜோஹர் இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறார். 'அன் அன்சூட்டபிள் பாய்' என்பதுதான் அவர் சமீபத்தில் எழுதியிருக்கும் புத்தகத்தில் தலைப்பு. இதில் பல விஷயங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். "எனது பாலியல் நாட்டம் என்ன என்பது பற்றி எல்லோருக்கும் தெரியும். அதை கூக்குரலிட்டுச் சொல்ல விரும்பவில்லை நான். அப்படிச் சொன்னால் நான் சிறைக்குள் தள்ளப்படுவேன் என்பதால் அப்படிச் சொல்லவே மாட்டேன்' என்றும் புத்தகத்தில் கொளுத்திப் போட்டிருக்கிறார்!