இலக்கியம்

சித்த மருத்துவக் களஞ்சியம்!

க.சே.ரமணி பிரபா தேவி

சித்த மருத்துவம் குறித்து இயல்பாக எழும் சந்தேகங் களை வெகு இயல்பாகக் கையாண்டிருக்கிறார் ‘சித்த மருத்துவ ஜன்னல்’ நூலின் ஆசிரியர் டாக்டர் ஜெரோம் சேவியர். ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் ஒன்றா, அலோபதி மருந்தை எடுத்துக்கொள்ளும்போது சித்த மருந்துகளைச் சாப்பிடலாமா? எதற்காகப் பத்தியம் இருக்க வேண்டும் என்பன போன்ற அடிப்படை சந்தேகங்களை முழுமையாகத் தீர்த்து வைக்கிறது இந்நூல்.

''ஒவ்வோர் உடல்வாகு கொண்டவர்களுக்கும் ஒவ்வொரு முறையில் சிகிச்சை அளிப்போம். எந்த நோயாக இருந்தாலும் பொதுவான மருந்து தராமல் நோயாளிகளின் உடல்வாகைக் கருத்தில் கொண்டே சிகிச்சை அளிக்க வேண்டும்'' என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர் ஜெரோம் சேவியர். குறிப்பிட்ட மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆசிரியர் முடிக்கிறார். அவசியம் படிக்க வேண்டிய சித்த மருத்துவ நூல் இது.

சித்த மருத்துவ ஜன்னல்

டாக்டர் ஜெரோம் சேவியர்

விலை: ரூ. 190

வெளியீடு: குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, சென்னை-10

தொலைபேசி: 044- 2642 6124

SCROLL FOR NEXT