கவிஞர் இமையம் எழுதிய ‘நறுமணம்’ சிறுகதைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். இந்தத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் பெண்களை மையப்படுத்தி எழுதப்பட்டவையே. அரசியலில் ஈடுபட்டுள்ள பெண்களின் இன்றைய நிலையையும், வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலையையும் புட்டுப் புட்டுவைக்கிறது ‘வீடும் கதவும்’ என்கிற கதை.
சமகால மனித வரலாற்றையும் மகளிர் வரலாற்றையும் பதிவுசெய்திருக்கும் மிக முக்கியமான சிறுகதைத் தொகுப்பு இது.
பள்ளி மாணவர்களுக்கான தமிழ் இலக்கண நூல் ஒன்றை எழுதியிருக்கிறேன். தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்களை மேற்கோள் காட்டி, மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் எடுத்துக்காட்டுகளுடன் எழுத்து, சொல், பொருள், அணி, யாப்பு என்னும் ஐவகை இலக்கணத்தையும் உள்ளடக்கிய நூல் அது.
மாணவர், ஆசிரியர், ஊடகவியலாளர் என அனைவருக்கும் பயன்படும் வகையில் எழுதப்பட்டிருப்பதே இந்நூலின் சிறப்பு.