விடுதலை பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகும் உறுபசியும் ஓவாப்பிணியும் இந்தியாவின் பெரும்பான்மை மக்களைத் துரத்திவருவதன் காரணத்தைத் தேடும் முயற்சிகளில் ஒன்றாகவே இந்நூல் அமைகிறது. கலிஃபோர்னியா பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியரான பெர்ரி ஆண்டர்சன், இந்தியா தனியொரு நாடாக உருவெடுப்பதற்கு முன்பு நிகழ்ந்த பிரிவினை, விடுதலை இயக்கத்தில் தொடக்கத்திலிருந்தே உள்ளீடாக ஓடிக்கொண்டிருந்த மத உணர்வு, அந்நிய ஆட்சியாளர்களின் நெருக்கடியான நிலை, தலைமைப் பண்புகளில் நிலவிய குறைகள் போன்றவற்றின் பின்னணியில் இதற்கு விடை காண முயல்கிறார்.
வேறொரு கோணத்திலிருந்து இன்றைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு அவர் தெரிவிக்கும் யோசனை நம்மை நூறாண்டு கால வரலாற்றை மீள்பார்வை செய்யத் தூண்டுகிறது. காய்தல் உவத்தலின்றி இந்திய விடுதலை வரலாற்றைக் காணும் முயற்சியே இந்நூல்.
- வீ. பா. கணேசன்