ஒவ்வொரு மொழியும் குறிப்பிட்ட இனத்தின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்ல உதவும் சாதனமாக அமைகிறது. அதில் பண்பாடும் அடங்கும். இந்தியாவில் மட்டுமே 196 மொழிகள் அழிவை நோக்கி நகர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு ‘மறைந்து போகும்’ ஒவ்வொரு மொழியும் அந்த இனத்தின் பண்பாட்டை, வரலாற்றை நம் பார்வையிலிருந்து விலக்கிவிடுகிறது.
இதற்கான காரணிகளில் ஒன்றாக, அனைத்தையும் கபளீகரம் செய்துவரும் உலகமயமாக்கல் இருந்தபோதிலும், அந்த மொழியைப் பேசும் மக்கள் ஒவ்வொருவராக மறைவது, வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள், மொழியின் வார்த்தைகள் தமது தனித்தன்மையை இழப்பது போன்றவையும் இத்தகைய அச்சுறுத்தலுக்குக் காரணிகளாக அமைகின்றன. இந்நூல் வடகிழக்கு இந்தியாவில் இவ்வாறு ‘மறைந்துவரும்’ மொழி, பண்பாடு ஆகியவற்றைக் காப்பாற்ற எடுக்க வேண்டிய முயற்சிகளை அலசுகிறது.
எண்டேஞ்சர்ட் கல்ச்சர்ஸ் அண்ட் லாங்க்வேஜஸ் இன் நார்த் ஈஸ்ட் இண்டியா,
கட்டுரைத் தொகுப்பு, ஸ்பெக்ட்ரம் பப்ளிகேஷன்ஸ்,
குவாஹாட்டி: டெல்லி. விலை: ரூ. 795
- வீ.பா. கணேசன்