இலக்கியம்

நூல் நோக்கு: விடுதலைப் போரின் தென்னக வேர்கள் !

செய்திப்பிரிவு

இந்திய விடுதலைப் போரின் வரலாற்றைப் பற்றிப் பேசும் ஆங்கில, பிற மொழி நூல்களைப் படிப்பவர்களுக்கு விடுதலைப் போர் என்பது ஏதோ வடக்கிந்திய விவகாரம் போல என்ற உணர்வுதான் ஏற்படும். ஆனால், 1857-ல் நடைபெற்ற சிப்பாய்கள் கிளர்ச்சிக்கும் முன்பே விடுதலைப் போரில் பல உயிர்ப் பலிகளைத் தென்னகம் கொடுத்திருக்கிறது. பூலித்தேவர், திப்பு சுல்தான், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், ஊமைத்துரை என்று பெரும் பட்டியல் இங்கே உண்டு. இந்தப் புறக்கணிக்கப்பட்ட வரலாற்றைத்தான் ‘1801’ நாவல் பேசுகிறது.

தோற்கடிக்கப்பட்ட புரட்சிகளுக்கும் தியாகங்களுக்கும் பின்னால் ஒளிந்திருக்கும் அற்பத்தனமான சுயநலத்தைப் பற்றியும் இந்த நாவல் பேசுகிறது. வரலாற்றைச் சரடுசரடாகக் கோத்து நாவலாக்கியிருக்கிறார் ராஜேந்திரன் இ.ஆ.ப. நாவலின் பின்னிணைப்பாக ‘வாழ்ந்தபோது சரித்திரமானவர்கள்’, ‘வீழ்ந்த பிறகு சரித்திரமானவர்கள்’ என்று இரண்டு பெரும் பட்டியல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புடைய இடங்களின் படங்களும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நாவலாகவும் வரலாறாகவும் படிக்க வேண்டிய நூல் இது.

- தம்பி

SCROLL FOR NEXT