இலக்கியம்

இதழ் முற்றம்: அடவி முன்னுதாரண இதழ்

செய்திப்பிரிவு

ஏழு வருடங்களாக வெளிவரும் இதழ் அடவி. ஆசிரியர் தில்லைமுரளி. தொடக்கத்தில் ஆதி என்னும் பெயரில் திருவண்ணாமலையிலிருந்து இந்த இதழ் வெளிவந்தது. தெளிவான வடிவமைப்பு, கலையம்சத்துடனான முகப்பு அட்டை என முன்னுதாரணமான இதழாக அடவி வெளிவந்துகொண்டிருக்கிறது. சினிமா, சிறுகதை, கவிதை, இலக்கிய விமர்சனம் மட்டுமல்லாது அரசியல், சமூகக் கட்டுரை, மொழிபெயர்ப்பு போன்ற அம்சங்களுக்கும் அடவி இடமளித்து வருகிறது. எழுத்தாளர் ஜீ.முருகனின் சிறுகதை, சிபிச்செல்வன், பச்சோந்தி ஆகியோரின் கவிதைகள், ச.ஆறுமுகத்தின் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட உள்ளடக்கத்துடன் இந்த இதழ் வெளிவந்துள்ளது.

இது மட்டுமல்லாது ஆதி என்னும் பழைய பெயரில் பதிப்பகத்தையும் ஆசிரியர் முரளி நடத்திவருகிறார். எழுத்தாளர் ஜீ.முருகன், கவிஞர் ராணிதிலக் போன்ற தமிழின் முக்கியமான படைப்பாளிகள் பலரின் ஆக்கங்களைத் தொடர்ந்து ஆதி பதிப்பித்து வருகிறது. இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி ஜீ.முருகனின் முழுச் சிறுகதைகள் தொகுப்பையும் ஆதி கொண்டு வந்துள்ளது.

அடவி (மாத இதழ்) தனி இதழ்: ரூ.25, ஆண்டுச் சந்தா: ரூ.250 ஆசிரியர்: தில்லைமுரளி தொடர்புக்கு: 99948 80005

- ஜெ.குமார்

SCROLL FOR NEXT