“உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்களா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா” என்று கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்.
உலகம் முழுவதிலும் உள்ள அறிஞர்கள், அறிவியலாளர்கள் ஆகியோரைப் பற்றி சாமிநாத சர்மா எழுதியுள்ள நூல்கள் தமிழின் முன்னோடி முயற்சிகளில் ஒன்று. அத்தகைய நூல்களில் ஒன்றுதான் ‘ரூஸோ’. ஜெனீவாவில் பிறந்த இந்தச் சிந்தனையாளரின் வாழ்வையும் சிந்தனைகளையும் சமத்துவம் மலர்வதற்கான அவரது மகத்தான பங்களிப்புகளையும் ஒரு நாவலுக்குரிய நடையில் எளிமையாகவும் துடிப்பாகவும் சொல்கிறார் சாமிநாத சர்மா. காரல் மார்க்ஸ், ரூஸோ ஆகிய ஆளுமைகளைப் பற்றிய சர்மாவின் நூல்களைப் படிக்கும் ஒருவருக்கு அவர்களை மிக நெருக்கமாக உணரவைக்கக்கூடிய அளவில் சர்மா தரும் சித்திரங்கள் இருக்கின்றன.
ரூஸோ வெ.சாமிநாத சர்மா, எஸ்.எஸ்.பப்ளிகேஷன், 8/2, காவலர் குடியிருப்புச் சாலை, தி.நகர், சென்னை 17, விலை ரூ. 60; தொடர்புக்கு: 9444280158.