இலக்கியம்

வலையெழுத்து - பி.ஏ. கிருஷ்ணன்

செய்திப்பிரிவு

காந்தியைப் பிடிக்குமா பிடிக்காதா என்பதைப் பற்றி பல சர்ச்சைகள் நடைபெற்றுவருகின்றன. அவற்றைப் படிக்கும்போது எனக்கு மோனாலிஸா ஓவியத்தைப் பற்றிய செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. ஓவியத்தின் முன்னால் நின்றுகொண்டு ஒருவன் “எனக்கு இந்த ஓவியம் அவ்வளவாகப் பிடிக்காது. உயர்த்திச் சொல்வதற்கு என்ன இருக்கிறது இதில்?” என்றானாம்.

அருகில் இருந்த ஒருவர் பதில் சொன்னார்: “ஐயா, இந்த ஓவியம் காலத்தை வென்றது. அவள் முன்னால் நிற்கும்போது மதிப்பிடப்படுபவர் நீங்கள்தான். மோனாலிஸா அல்ல.” மோனாலிஸா என்னுடைய பிரியமான ஓவியங்களில் ஒன்று அல்ல. காந்தி எனக்கு மிகவும் பிரியமானவர்.

சுண்டல்

இளைய தலைமுறை தமிழ் ஆய்வாளர்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான மிகச் சிலரில் ப. சரவணனும் ஒருவர். அருட்பா - மருட்பா கண்டனத் திரட்டு, சிலப்பதிகாரம், நாலடியார், கலிங்கத்துப் பரணி போன்ற நூல்களைத் தொடர்ந்து மிக முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கிறார். உ.வே.சா-வின் முன்னுரைகளைத் தொகுக்கும் பணிதான் அது. உ.வே.சா-வின் 106 நூல்களிலிருந்து 130 உரைகள், அதுவும் உ.வே.சா. காலத்தில் வெளியான பதிப்புகளைப் பின்பற்றி! உ.வே.சா. செய்த மொத்த பணியின் வீச்சையும் இந்த ஒரே புத்தகத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். காத்திருக்கிறோம் சரவணன்!

SCROLL FOR NEXT