அரசியல் கவிதைகள்
அரசியலற்ற உலகத்தை எப்படிக் கற்பனை செய்து பார்க்க முடியாதோ அப்படித்தான் அரசியல் கவிதைகளற்ற இலக்கி யத்தையும் கற்பனை செய்து பார்க்க முடியாது.
அந்த வகை யில் வ. கீதா, எஸ்.வி. ராஜதுரை தமிழாக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகம் முக்கியமானது. உலகம் முழுவதும் மக்கள் போராட்டங்களும் இயக்கங்களும் எழுச்சி அடையும் போது, அவற்றை வெளிப்படுத்தும் கவிதைகளும், புனைவுகளும், புனைவல்லாத படைப்புகளும் உருவாகும். இப்படி உருவான அரசியல் கவிதைகளின் தொகுப்புதான் இந்நூல்.
இந்தத் தொகுப்பில் கிட்டத்தட்ட 150 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அரசியலற்ற சமூகத்தின் ஆபத்தை உணர்ந்தவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.
கடைசி வானத்துக்கு அப்பால்
தமிழாக்கம்: வ. கீதா, எஸ்.வி. ராஜதுரை
ரூ. 300, எதிர் வெளியீடு