இலக்கியம்

சென்னை புத்தகக் காட்சி | தூரிகை முழக்கம்!

செய்திப்பிரிவு

புத்தகக் காட்சியில் கண்ணைப் பறிக்கிற, வித்தியாசமான சுற்றுச்சூழல் ஓவியங்களுடன் கவர்கிறது ‘ஹனி பீ’ அரங்கு. சுற்றுச் சூழல், குழந்தை இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் கிடைக்கும் அரங்கு இது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார் இளைஞர் பகலவன். டிஜிட்டல் ஓவியங்களும் உண்டு.

“விவசாயத்துக்குத் தேவையான பஞ்சபூதங்களை எப்படி மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளையும், மரபணு மாற்றுப் பயிர்களின் தீங்குகள் குறித்த விழிப்புணர்வையும் f5green.org எனும் வலைதளம் மூலம் முன்வைக்கிறோம்” என்று சொல்லும் பகலவன், முறைப்படி ஓவியம் கற்றவர் அல்ல. “

‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்’ பாடலை எழுதிய கவிஞர் நா.மா. முத்துக்கூத்தன் எனது தாத்தா. அப்பா கலை வாணன் பொம்மலாட்டக் கலைஞர். இன்று வரை எங்கள் குடும்ப வருமானம் கிடைப்பது பொம்மலாட்டக் கலை மூலம் தான். அதன் தொடர்ச்சியாக ஓவியத்தையும், அனிமேஷனை யும் கற்றுக்கொள்ள முடிந்தது” என்கிறார்.

SCROLL FOR NEXT