இலக்கியம்

பிறமொழி நூலறிமுகம்: பெண் மொழி பேசும் உருது எழுத்து

வீ.பா.கணேசன்

ருது இலக்கியத்தின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவர் இஸ்மத் சுக்தாய். அவரது தலைமுறை எழுத்தாளர்களில் ஈடிணையற்றவராகத் திகழ்ந்த அவர்,ச் எழுத்தில் மட்டுமின்றி பாகிஸ்தானின் திரைப்படத் துறையிலும் தனி முத்திரை பதித்தவர்.

சுக்தாய் எழுதிய மூன்று நாவல்களில் மிகச் சிறந்ததான ‘மசூமா’, பகடைக்காய் என உருட்டி விடப்படும் பெண்களின் நிலையை, அவர்களின் மீதான வன்முறையை ரத்தம் கசியக் கசிய வெளிப்படுத்தியிருந்தது. மும்பை திரைப்பட உலகிலிருந்து துவங்கி, அரசியல் அரிதாரிகள் வரை, ஒவ்வொரு படியிலும் பெண்கள் எதிர் கொண்ட வன்முறையை, துரோகத்தை, அநீதியை, சுட்டெரிக்கும் வார்த்தைகளால் நிரப்பியுள்ளது இந்த நாவல்.

சாதத் ஹசன் மாண்ட்டோவின் மிகச் சிறந்த தோழியான சுக்தாயின் சமூகப் பார்வையும் அவருக்கு இணையானது என்பதை இந்த நாவல் ஒவ்வொரு வரியிலும் நிரூபிக்கிறது.

மசூமா இஸ்மத் சுக்தாய்
(உருது) தஹிரா நக்வி
(ஆங்கிலம்) பதிப்பாளர் வுமன் அன்லிமிடெட் (காளி ஃபார் வுமன்)
கே-36, ஹாஸ் காஸ் என்க்ளேவ், புதுதில்லி 110 016
விலை : ரூ. 250

SCROLL FOR NEXT