இலக்கியம்

காஷ்மீரிலிருந்து ஒரு குரல்

செய்திப்பிரிவு

காஷ்மீரில் பிறந்து 1990-ல் அங்கு ஏற்பட்ட கலவரத்தால் புலம்பெயர்ந்தவர் இந்திக் கவிஞர் அக்னி சேகர். அவரது கவிதைகளை இந்தியிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்திருக்கிறார் ரமேஷ் குமார். இந்த நூலிலிருந்து ஒரு கவிதை இங்கே:

இடிபாடுகளில் இன்னும் மீதமிருக்கிறது அந்த வாசல்படி

தன் வீட்டைத் தேடியபடி

இந்த வாயில்தான்

எங்களை உள்ளும் வெளியும் அனுமதித்தது

இப்போது உள்ளே சூனியமாய்க் கிடக்கிறது

வெளியே

மயான அமைதி

எங்களை விட்டுவிட்டு அந்த வாசல்படி

என்ன செய்துகொண்டிருக்கிறதோ தெரியவில்லை

நாங்கள் கிடப்பது இறந்தகாலக் கனவுகளில்

எங்கள் எதிர்காலமோ மௌனமாய் இருக்கிறது

வெயிலிலும் மழையிலும் நின்று கிடந்தது வாசல்படி

இப்போது காலத்தின் காயங்களை

ஊதி ஊதி ஆறவைத்துக்கொண்டிருக்கிறது.

என் நூறு கிராமங்களின் பெயர்களை இரவோடு இரவாக மாற்றிவிட்டனர்

(கவிதைகள்)

அக்னி சேகர்

இந்தியிலிருந்து தமிழில்: ரமேஷ்குமார்

விலை: ரூ. 50

வெளியீடு: இடையன் இடைச்சி நூலகம், ஈரோடு- 638 101.

தொடர்புக்கு: 99420 50065

SCROLL FOR NEXT