இலக்கியம்

சென்னை புத்தகக் காட்சி | கலாச்சாரப் பெருமை

செய்திப்பிரிவு

அஞ்சல்தலை சேகரிப்பு என்பது அலாதியான பொழுதுபோக்கு மட்டுமல்ல, கலையும்கூட. புத்தகக் காட்சி அரங்கில் பலரையும் ஈர்க்கிறது ‘தென்னிந்திய அஞ்சல்தலை சேகரிப்பாளர் சங்க’த்தின் அரங்கு (எண்: 1).

“இப்போது கடிதங்கள் அனுப்புவது குறைந்தாலும், அஞ்சல்தலை வெளியிடப்படுவது குறையவில்லை. அஞ்சல்தலை என்பது ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரப் பெருமைகளுள் ஒன்று. ஆகவே, அஞ்சல்தலை சேகரிப்பு ஆர்வமும் ஓரளவு குன்றாமல் மக்களிடையே இருக்கிறது. எங்கள் சங்கத்தின் 60-ம் ஆண்டு இது என்பது மகிழ்ச்சியான செய்தி” என்றார் அந்த சங்கத்தின் செயலாளர் ரோலன்ட் நெல்சன்.

அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தனது 7 வயது மகனுக்கு ஒருவர் அஞ்சல்தலைகள் வாங்கிக்கொண்டிருந்தார். அவரிடம் பேசியபோது, ‘‘என் பெயர் மா.தாமோதரக்கண்ணன். திருச்சியில் பள்ளி ஆசிரியர். நானொரு எழுத்தாளரும் கூட. எனக்கு வரும் கடிதங்களையெல்லாம் ஆர்வத்துடன் என் மகன் வாங்கி அதில் ஒட்டப்பட்டிருக்கும் அஞ்சல்தலைகளைச் சேகரிப்பான். இப்போது அவனிடம் ஏராளமான அஞ்சல்தலைகள் சேர்ந்திருக்கின்றன’’ என்றார்.

அந்த அரங்கில் கையடக்க உறையில் இடப்பட்டிருக்கும் அஞ்சல்தலைகள் பத்து ரூபாய்க்குக் கிடைக்கின்றன. தவற விட வேண்டாம்!

SCROLL FOR NEXT