இலக்கியம்

நூல் நோக்கு: அப்போது பிரெஞ்சு இந்தியாவில்...

செய்திப்பிரிவு

மனித வாழ்வுக்கும் அதன் வளர்ச்சிக்கும் அடிப்படையானது கல்வி. இன்றைய நம் கல்வி முறையானது அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான சரியான தீர்வு குறித்த சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கிறதா என்கிற கேள்வியை எழுப்பினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. மனிதர்களின் வாழ்க்கை முறைக்கும் கற்பிக்கப்படும் கல்வி முறைக்குமான உறவென்பது நெருக்கமானதாக இருக்க வேண்டியது அவசியம்.

பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அளிக்கப்பட்ட பிரஞ்சிந்தியக் கல்வி முறை பற்றிய விரிவான தகவல்களையும் அந்தக் கல்வி முறையின் சிறப்புக் கூறுகளையும் மிக விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார் முனைவர் அ.இராமதாசு. 1827-ல் குடியேறிகளின் குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட பெண் கல்வியானது, சிறிது காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூக மக்களுக்கும் வழங்கப்பட்டது, ஏழை மாணவர்களும் கல்வி பெற வேண்டுமென்பதற்காக 1931-ம் ஆண்டிலேயே புதுச்சேரியில் ஓர் அரசுப் பள்ளியில் மதிய உணவுத்திட்டம் தொடங்கப்பட்டது, 1898-ல் அனைத்து மக்களுக்கும் தொடக்கக்கல்வி கட்டாயமாக்கப்பட்டது என பல வரலாற்றுத் தரவுகள் இந்நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன.

SCROLL FOR NEXT