பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் தோற்றம், அது ஏற்படுத்திய பாதிப்புகள், அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் போன்றவற்றை நடுநிலையோடு பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். அர்த்த கிராந்தி என்ற அமைப்பினர் பத்தாண்டுகளுக்கும் மேலாக எல்லா அரசியல் தலைவர்களையும் சந்தித்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்திவந்ததையும், குஜராத் முதல்வராக இருந்தபோதே இதைக் கேட்டிருந்த மோடி, பிரதமரானதும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதையும் நூல் விவரிக்கிறது. லஞ்சம், கள்ளக்கடத்தல், ஹவாலா போன்றவற்றின் மூலமானது கொடிய கறுப்பு என்றும், கறுப்புப் பண சுழற்சி என்பது ரத்தத்தில் கலந்த நஞ்சு என்றும் எளிய முறையில் ஆசிரியர் விளக்குகிறார். 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகு 2,000 நோட்டு ஏன் என்று ப. சிதம்பரம் கேட்டதற்கு இரண்டு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. பண மதிப்புநீக்க ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இருவருமே படிக்க வேண்டிய புத்தகம்.
-சாரி