சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில் நாதன் எழுதிய ‘மங்களம்’ முதல் நாவலைத் தொடர்ந்து, இரண் டாவது நாவலாக வெளிவந்திருக் கிறது ‘நீதியரசர் மா.மாணிக்கம்.’ நாவலுக்கான கதைக்களனை வேறெங்கும் தேடிப் போகாமல், தான் பணியாற்றும் நீதிமன்றச் சூழலையும், அங்கு நிகழும் சமூகப் பகிர்வுகளையும் அப்படியே கதையாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.
நேரடியான கதை சொல்லல் முறையில் வாசிப்பு சுவாரசியம் சற்றும் குறையாதபடி நாவலைப் படிக்க வைப்பதில் வெற்றிபெற்றுள்ளார் நூலாசிரியர்.
19.02.2009 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறையினர் நடத்திய வன்முறைச் சம்பவத்தை நாவலின் முக்கியக் காட்சியாக்கியுள்ளார் ஆசிரியர். ‘எல்லோரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள்தான்; அது நீதிபதியாயினும்’ என்பதை உறுதியான குரலில் சொல்கிறது இந்த நாவல்.
- மு.மு
நீதியரசர் மா.மாணிக்கம்
சிகரம் ச.செந்தில்நாதன்
விலை: ரூ.150/-
வெளியீடு: சிகரம், கே.கே.நகர், சென்னை 78.
தொடர்புக்கு: 9444082180