இலக்கியம்

புரட்சி என்பது ஒரு தொடர் செயல்பாடு: கன்னையா குமார்

செய்திப்பிரிவு

விழாவில், ‘இந்தியா புரட்சிக்குத் தயாராகிவிட்டதா?’ என்ற அமர்வில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் கன்னையா குமார், கலை விமர்சகர் சதானந்த் மேனன் இருவரும் கலந்துரையாடினர். அமர்வில் கன்னையா குமார் பேசியது:

“இந்திய இளைஞர்களிடம், “ஓர் ஆண்டில் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன், கறுப்புப் பணத்தை மீட்டு உங்கள் அனைவருடைய வங்கிக் கணக்குகளிலும் பதினைந்து லட்சம் போடுவேன்” என்றெல்லாம் கூறித்தான் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், காவிமயமாக்கத்தைத் திணிப்பதைத்தான் அவருடைய அரசு செய்துவருகிறது. இந்தக் காவிமயமாக்கல் நம்முடைய கல்வி நிறுவனங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியா மாதிரியான பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் மோடி நினைக்கும் ஒருமைத்தன்மையைக் கொண்டுவர முடியாது. என்றாலும், பன்முகத்தன்மைக்குப் பெரிய அளவில் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. நாம் ஒரு கடினமான காலகட்டத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். புரட்சி நடப்பதற்கு என்று தனியாக ஒரு நாளை உருவாக்க முடியாது. அது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு!” என்றார் கன்னையா குமார்.

SCROLL FOR NEXT