இலக்கியம்

நூல் நோக்கு: யசோதராவின் கண்ணீர்

செய்திப்பிரிவு

இந்தக் கவிதைகளைத் தொடர்ச்சியாகப் படிக்கும்போது அகவெளியின் துயரத்தை, கொண்டாட்டத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, தேடுதலை, நம்பிக்கையை உலகின் பல்வேறு கருத்தாக்கங்களோடு இயைந்தும் முரண்பட்டும் சொல்லிச் செல்வதை ரசிக்க முடிகிறது.

இந்தக் கவிதைகள் வட்டாரத்தை மீறி, மொழியைத் தாண்டி, வேறொரு உலகத்துக்குக் கூட்டிச் சென்றன.

கனிமொழியின் அனுபவ மொழியில் கவித்துவமானவையும் அற்றவையுமான வரிகளும் குறிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன. போதிமரத்தை தேடிச் செல்லும் வழியில் யசோதராவின் கண்ணீர் முள்ளாக மாறுவது கவித்துவ ஒருமை இல்லாமல் வெளிப்படுகிறது.

எதைச் சொல்கிறோம் என்பது போலவே எப்படிச் சொல்கிறோம் என்பதும் கவிதையில் முக்கியம்தானே? கனிமொழியின் கவிதை உலகம் அவருடைய அக உலகப் பரிமாணங்களை உலகின் பல்வேறு நிகழ்வுகளோடு தற்காலச் சூழலில் தொன்மங்களைப் பொருத்திக் கேள்விகளை மட்டும் எழுப்பாமல் சில புரிதல்களையும் முன்வைக்க முனைகிறது.

இக்கவிதைகளை அவருடைய வரிகளில் சொல்வதானால், “இப்போது எனக்கு நான் நேர்மையானவன்/ உனக்கு நீ செல்வாக்கானவன்.”

SCROLL FOR NEXT