இலக்கியம்

பிறமொழி நூலறிமுகம்: வடகிழக்கும் சுயாட்சியும்

வீ.பா.கணேசன்

அந்நியர் ஆதிக்கத்திலிருந்து நாடு விடுதலை பெற்றபோது இந்தியாவுடன் இணைய மறுத்துப் போராடிய வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த இனக்குழுக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட அரசியல் சாசனத் திருத்தங்களின் மூலம் ஆறாவது அட்டவணையின் கீழ் புதிய சுயாட்சிப் பகுதிகள் உருவாயின.

அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் அவ்வப்போது உருவாக்கப்பட்ட சுயாட்சி கவுன்சில்களின் அவசியம், அவற்றின் செயல்பாடுகள் ஆகியவை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இப்பகுதிகளில் வெடித்தெழுந்த எதிர்ப்பு இயக்கங்களின் வரலாற்றுப் பின்னணியில், நமது அரசியல் சாசனம் எந்த அளவுக்கு இந்த இனக்குழுக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியிருக்கிறது என்பதைச் சட்ட வழியில் இந்நூல் எடுத்துரைக்கிறது.

SCROLL FOR NEXT