இலக்கியம்

ஒரு மருத்துவ சாம்ராஜ்யத்தின் கதை

செய்திப்பிரிவு

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள அரகொண்டா என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரதாப் சந்திர ரெட்டி எப்படி ‘அப்போலா’ என்ற தனது கனவை நனவாக்கினார் என்பதை இந்நூல் அலசுகிறது.

ஆங்கிலத்தில் ‘ஹீலர்’ என்ற பெயரில் வெளியான இந்தப் புத்தகத்தைத் தமிழில் எழுத்தாளர் சிவசங்கரி மொழிபெயர்த்திருக்கிறார்.

டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டியின் வாழ்க்கையை அனைவருக்கும் ஊக்கமூட்டும் ஒரு கதையாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் பிரணய் குப்தே.

1983-ம் ஆண்டில் இந்தியாவில் முதல் தொழில்ரீதியான தனியார் துறை மருத்துவ அமைப்பாகத் தொடங்கப்பட்டது ‘அப்போலோ மருத்துவமனை’ குழுமம்.

இன்று அந்த அமைப்பு எப்படி மருத்துவத் துறையின் முன்னோடியாகத் திகழ்கிறது என்பதற்கான விடையையும், அப்போலோ உருவான பின்னணியையும் சொல்கிறார் பிரதாப் ரெட்டி. இந்நூல் பிரதாப் ரெட்டியின் வாழ்க்கையை மட்டும் பின்தொடராமல், இந்திய மருத்துவ வளர்ச்சியையும் சேர்த்து வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

SCROLL FOR NEXT