இலக்கியம்

இப்போது படிப்பதும் எழுதுவதும்: ப.சரவணன், ஆய்வாளர்

செய்திப்பிரிவு

ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய ‘ஆஷ் அடிச்சுவட்டில்...’ எனும் நூலை அண்மையில் படித்தேன். வரலாறு, சமூகம், மொழி சார்ந்த வாழ்க்கை அனுபவமிக்க மனிதர்களின் சமூக அசைவியக்கத்தை வெளிப்படுத்தும் நடைச்சித்திரமே இந்நூல். எல்லீஸ், ஆஷ், ஜி.யூ.போப், உ.வே.சா, ம.வீ.ராமானுஜ ஆசாரியார், ஏ.கே.செட்டியார் போன்ற உலக, இந்திய ஆளுமைகளைப் பற்றி விவரித்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பல்வேறு அறியப்படாத தகவல்களுடன் நம்மை ஈர்க்கிறது இந்த நூலின் விறுவிறுப்பான மொழிநடை.

காலவரிசைப்படி இதுவரை முறைப்படுத்தப்படாத, தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய முழுமையான ஆவணங்களைத் திரட்டிப் பெரிய நூலொன்றை எழுதிக்கொண்டிருக்கின்றேன். 1938 தொடங்கி அண்மைக்காலம் வரை நடைபெற்ற போராட்ட வரலாறு ‘இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு’ எனும் பெயரில் நூலாக வரவுள்ளது.

SCROLL FOR NEXT