இலக்கியம்

விடுபூக்கள் : சி. தட்சிணாமூர்த்தியின் கலைப் பயணம்

செய்திப்பிரிவு

சி. தட்சிணாமூர்த்தியின் கலைப் பயணம்

சித்திரத்தின் வாழ்க் கையைச் சிற்பம் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அது அர்த்த மற்றது என்ற நம்பிக் கையைக் கொண்டு இயங்கி யவர் தட்சிணா மூர்த்தி.

அவருடைய சிற்பங்கள் எல்லாமே உருவப் படைப்பு கள்தாம். சிற்பத்தில் வாழ்க்கை உயிர்கொள்ள அது உருவப் படைப்பாக இருக்க வேண்டியது அவசியமென்று கருதி னார். அதேசமயம், கன்னி கோவில் போன்ற நம் கிராமக் கோவில்களில் அரூப வடிவங்களோடு வீற்றிருக்கும் தெய்வங்கள், நம் வாழ்வோடும் சடங்குகளோடும் பிணைந்திருப்பதில் உள்ள மாயத்தையும் வாழ்வியல் பயன்பாட்டையும் வியந்து போற்றியவர். ஒருமுறை அவர் சொன்ன விஷயமிது: “சிறு கிராமக் கோவில்களுக்கு ஒரு உணர்ச்சியுண்டு- ஏதோ ஒன்று அங்கு வாழ்வது போல, தெற்கில் கலை, சமயம், வாழ்வு எல்லாமே ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளன. அப்படியான ஒன்றில் கலை உயிரோட்டம் இல்லாமல் இருக்க முடியாது. சமயமும் அப்படித்தான். என் படைப்புகளில் நம் வாழ்வோடு உறவாடும் உயிரோட்டத்தைக் காணலாம். உயிரோட்டமே இல்லாத ஒன்றில் விஞ்ஞானமோ ஆன்மிகமோ இருக்கலாம். ஆனால் அவை எதுவும் எனக்கு முக்கியமில்லை” என்றார். கலை, மக்கள் வாழ் வோடு உறவாட வேண்டுமென்ற நம்பிக்கை கொண்டவர். (நேற்று சென்னை பெசன்ட் நகர் ஸ்பேசஸ் அரங்கில், மறைந்த கே.எம். ஆதிமூலம் பவுண்டேஷன் பார் ஆர்ட்ஸ் நடத்திய நிகழ்வில் எழுத்தாளரும் கலை விமர்சகருமான சி.மோகன், சிற்பி தட்சிணாமூர்த்தி பற்றி ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி.)

தமிழறிஞருக்கு தொல்காப்பியர் விருது

தமிழறிஞர் அ.தட்சிணா மூர்த்திக்கு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது அறிவிக் கப்பட்டுள்ளது. இவர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் மதுரை செந்தமிழ்க் கலைக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பத்தொன்பது பழந்தமிழ் இலக் கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அகநானூற்றை முதன்முதலில் முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்த பெருமை இவருக்கு உண்டு. இது மட்டுமல்லாது ‘தமிழர் நாகரிகமும் பண்பாடும்’ என்னும் நூலும் இவரது தமிழ்க் கொடைகளில் ஒன்று.

SCROLL FOR NEXT