இலக்கியம்

பளிச்: பேயோனாக மாறி...

செய்திப்பிரிவு

‘கவிதை இயற்றுவது இவ்வளவு எளிதாக இருக்கும்போது அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது?’ என்று தர்மாவேசம் கொண்டு உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் பேயோன் எழுதிய கவிதைகளின் பெருந்தொகுப்பு இது. தற்போதைய தமிழ்க் கவிஞர்கள் அநேகரும் தங்கள் கவிதைகளை பேயோன் கவிதைகள் பக்கத்தில் வைத்து ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வது கவிதைக்கு நல்லது. ஏனெனில், தற்போது எழுதப்பட்டுவரும் நவீன, பின்நவீன, கலகக் கவிதைகளுக்கும் பேயோனின் இந்தக் கவிதைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி ரொம்பவும் குறைவு. பலரும் தங்களின் பேயோனாக மாறி எழுதிக்கொண்டிருக்கும் சூழலில் புழுக்கமான காற்றுபோல் இந்த நூல் புத்துணர்ச்சியளிக்கிறது.

வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை
பேயோன்
ரூ. 200, சஹானா வெளியீடு

SCROLL FOR NEXT