ஹாருக்கி முரகாமி, அலிஃபா ரிஃபாத், ஜூலியோ கொர்த்தஸார், விளாதிமீர் நபக்கோவ், ஐசக் பாஷ்விஷ் சிங்கர் ஆகியோரின் சிறுகதைகளை செ. ஜார்ஜ் சாமுவேலின் மொழிபெயர்ப்பில் நூலாக்கி வெளியிட்டிருக்கிறது புது எழுத்து பதிப்பகம். கல்குதிரை, கொம்பு, புது எழுத்து, மந்திரச்சிமிழ் ஆகிய வெகுசனங்களுக்கு அதிக அறிமுகமற்ற சிற்றிதழ்களில் இந்தக் கதைகள் வெளியாகியுள்ளன.
முதலில் எந்தக் கதையைப் படிக்கலாம் என உள் ளடக்கம் பக்கத்தைத் தேடினால் ஏமாந்துவிடுவீர்கள். இந்தத் தொகுப்பின் பின்னட்டைக் குறிப்பின் வாசகங் கள் நாமறியாத ஒரு பிரதேசத்துக்கு நம்மை இழுத்துச் செல்கின்றன. ஆனால், நூலின் கதைகளோ நம்மோடு நெருக்கம் கொள்கின்றன். ஹாருக்கி முரகாமியின் ‘ஸ்பெஹட்டி ஆண்டு’ கதையில் தனியொருவனின் சமையல் புராணம் வழியே தனிமையுணர்வும் காதல் உணர்வும் நம் இதயத்தை நிறைக்கின்றன. புணர்ச்சியின் பிறகான தன்னுணர்வுகளை இறக்கிவைக்கும் மனைவியின் கதை அடுத்துவருகிறது. இப்படி ஒவ்வொரு கதைகளும் வெவ்வேறு களங்களில் நிகழ்வதால் கிடைக்கும் வாசிப் பனுபவம் இத்தொகுப்பைக் கவனிக்கவைக்கிறது.
மேன்கஸ்பியஸ்
அயல்மொழிக் கதைகள்
தமிழில்: செ.ஜார்ஜ் சாமுவேல்
விலை: ரூ. 130
புது எழுத்து, காவேரிப்பட்டிணம் 635112
தொடர்புக்கு: 09842647101