இலக்கியம்

நூல் நோக்கு: எழுத்தில் வாழும் ஜெயகாந்தன்

செய்திப்பிரிவு

தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பெரும் ஆளுமைகளுள் ஒருவரான ஜெயகாந்தன், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இதழ்களில் எழுதிய பத்துச் சிறுகதைகளும், ‘தி கிரேட் ஹீரோ’ இதழில் தொடராக எழுதிய பதினைந்து கட்டுரைகளின் தொகுப்பும் சேர்ந்து ஒரே நூலாகியுள்ளன. இந்த கதைகளும், சினிமா குறித்த கட்டுரைகளும் இதுவரை ஜெயகாந்தனின் எந்த நூலிலும் இடம்பெறாதவை என்பதே கவனிப்பைக் கூடுதலாக்குகிறது. ‘கண்ணம்மா’ கதையில் வரும் ரிக்‌ஷாக்கார மாணிக்கமும், ‘பெண்’ கதையில் வரும் பார்வதி, காவேரியும், ‘வேலை கொடுத்தவன்’ கதையில் வரும் கந்தனும் ஜெயகாந்தனின் கதைகளை முன்பே படித்தவர்களுக்குச் சட்டென நெருக்கமானவர்களாகிவிடுகிறார்கள். முற்றுப்பெறாத சினிமா தொடர் ஒன்றின் பகுதிகள் இவை என்கிற உறுத்தலில்லாமல் சினிமா குறித்தும், அந்தத் துறையில் ஆளுமை செலுத்திவரும் கலைஞர்கள் குறித்தும் தன் பார்வையை எந்த சமரசமுமின்றி பதிவு செய்துள்ளதே ஜெயகாந்தனின் எழுத்தாளுமைக்குச் சான்று.

-முருகு

SCROLL FOR NEXT