திருவாசகத்தை உரையோடு படிக்க வேண்டும் என்று வெகுநாளாக ஆசை. சென்னை போயிருந்தபோது கா. சுப்பிரமணிய பிள்ளை உரை எழுதி பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட திருவாசகம் கிடைத்தது. அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். கா. சுப்பிரமணிய பிள்ளை செய்த வேலை தமிழுக்கு அரும்பெரும் தொண்டு.
சமீபகாலமாக தொடர்ந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதில் ‘வானப்ரஸ்தம்’ கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘சொற்றுணை வாழ்க்கை’ என்ற பொதுத்தலைப்பில் தொடர்ந்து, புதிய கவிஞர்கள் வே.பாபு, அகச்சேரன், கறுத்தடையான் முதலியோரின் படைப்புகளைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். - கவிஞர் விக்ரமாதித்யன்