இலக்கியம்

அழைப்பிதழ் நூல்!

செய்திப்பிரிவு

எழுத்தாளர் மாரி செல்வராஜ் தனது திருமண அழைப்பிதழைச் சிறு புத்தகம் போல் அழகாக வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார். அவரது உண்மைக் கதை ஒன்றைத் தனது வருங்கால மனைவிக்குச் சொல்லும் விதத்தில் இந்த அழைப்பிதழை வடிவமைத்திருக்கிறார். தனது முன்னாள் காதலியையும் சாதி பிரித்த அவர்கள் காதலையும் பற்றிய கதை இது. தற்கொலை விளிம்புவரை சென்ற காதல் அது. கதையின் முடிவில் இரண்டு கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்காங்கே அழகான கோட்டோவியங்களும் உண்டு. இந்த அழைப்பிதழ் நூலிலிருந்து

ஒரு கவிதை இங்கே: பழைய காதலோ

புதிய காதலோ

ஒரு காதல்

உன்னிடத்தில்

எப்போதுமிருக்க வேண்டும்.

அதுதான்

உனது ஆப்பிளை

உனக்கு பறித்துக் கொடுக்கும்.

SCROLL FOR NEXT