இலக்கியம்

பத்து விதமான வாழ்க்கைகள்!

செய்திப்பிரிவு

இயல்பான வாழ்க்கைச் சம்பவங் களை, சற்றும் நெருடலற்ற எழுத்து நடையில் கதைகளாகப் பதிவு செய்வதில் வல்லவரான எஸ். சங்கரநாராயணனின் சமீபத் திய சிறுகதைத் தொகுப்புதான் ‘இறந்த காலத்தின் சாம்பல்’.

தனது ஒன்றரை வயதுக் குழந்தையுடன் தாயொருத்தி தனித்திருக்கும் கணங்களைப் பற்றிய முதல் கதையான ’வண்ணச்சீரடி’ தொடங்கி, ஏரிக்கரைகள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதால், மழைக் காலங்களில் மக்கள் படும் இன்னல்களைப் பேசும் ‘ஏரிக்கரை நாகரிகம்’, அரசுப் பள்ளித் தலைமையாசிரியை வைஜெயந்தியின் பணியிடச் சிக்கல்களை விவரிக்கும் ‘ரச்மி’ என்று ஒவ்வொரு கதையும் மனவுலகத்தின் விசாலத்தை இயல்பாய்ப் பேசுகின்றன.

லேசான எள்ளலும் கலந்து எழுதப்பட்டிருக்கும் இத்தொகுப்பிலுள்ள பத்துக் கதைகளும் பத்து விதமான வாழ்க்கைகளை நமக்குச் சொல்கின்றன.

- மு.மு

இறந்த காலத்தின் சாம்பல்

எஸ்.சங்கர நாராயணன்

விலை: ரூ.120/-

வெளியீடு: சொல்லங்காடி, சென்னை 11. தொடர்புக்கு: 96770 53933

SCROLL FOR NEXT