இலக்கியம்

தமிழ்ச் சமூகத்தின் இரட்டை அளவுகோல்கள்: பெருமாள்முருகன்

செய்திப்பிரிவு

விழாவில், ‘எழுத்தின் மறுவருகை’ என்ற அமர்வில் எழுத்தாளர் பெருமாள்முருகனும், வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதியும் கலந்துரையாடினர். அமர்வில் பெருமாள்முருகன் பேசியது:

நம்முடைய சமூகம் இன்னும் சாதி சார்ந்த சமூகமாகவே இருக்கிறது. இந்தச் சமூகம் எழுத்தறிவு மட்டும் இருக்கும் சமூகமாகவே இன்னும் இருக்கிறது. அறிவுசார்ந்த விவாதத்துக்கு இடமளிக்கும் சமூகமாக அது இன்னும் உருவாகவில்லை. விழுமியங்களைக் கடைப்பிடிப்பதில் தமிழ்ச் சமூகம் இரட்டை அளவுகோல்களைக் கடைப்பிடிக்கிறது. தனிப்பட்ட முறையில் அது விழுமியங்களை மீறும், ஆனால் பொதுவில் அவற்றை உயர்த்திப் பிடிக்கும். என்னுடைய ‘மாதொருபாகன்’ புத்தகத்துக்கு எழுந்த எதிர்ப்புக்குப் பிறகு நான் எதையும் படிக்காமல்கூட இருந்தேன். பிறகு தயக்கத்துடன்தான் மீண்டும் எழுதத் தொடங்கினேன்” என்றார் பெருமாள்முருகன்.

SCROLL FOR NEXT