இலக்கியம்

இப்போது படிப்பதும் எழுதுவதும் - எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி

செய்திப்பிரிவு

இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் பாடுகளையும், அவர்கள் காலங்காலமாய் எதிர்கொண்ட போராட்டங்களைப் பற்றியுமான நாவலொன்றை எழுதும் முயற்சியில் இருக்கிறேன். இதற்காகவே இலங்கை சென்று, அங்குள்ள தோட்டத் தொழிலாளர்களோடு சில நாட்கள் தங்கியிருந்து குறிப்புகளையும் சேகரித்து வந்துள்ளேன்.

டால்ஸ்டாயின் படைப்புகள் என்னை மிகவும் ஈர்த்தவை. அவரது நாவல்களில் கதாபாத்திரங்களை மிகவும் யதார்த்தமாகவும் நுட்பமாகவும் படைத்திருப்பார். அவருடைய கதாபாத்திரப் படைப்பின் பாதிப்பு எனது நாவல்களிலும் வெளிப்படும். டால்ஸ்டாயின் படைப்புகளை அடிக்கடி படிப்பேன். அவை எனக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும். முன்பே பலமுறை படித்திருந்தாலும், இப்போது அவரது ‘போரும் அமைதியும்’ நாவலை மீண்டும் படித்து ரசித்தேன். அவரது எழுத்துக்குள் முழுமையாய் நானே கரைந்துபோகும் அனுபவத்தை உணர்ந்தேன்.

SCROLL FOR NEXT