இலக்கியம்

குற்றப் பரம்பரையின் நூறு ஆண்டுகள்

வினு பவித்ரா

ஆளும் வர்க்கத்தினர் சார்ந்தே எழுதப்பட்ட வரலாறுகள் இன்று கேள்விக்குறியாகியுள்ளன. மக்களின் நினைவுகளிலிருந்தும், வாய்மொழிக் கதைகளிலிருந்தும் எழுதப்பட்டவையும் வரலாறுதான் என்ற நம்பிக்கை இன்றைய காலகட்டத்தில் உறுதிப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென்பகுதியில் ஒரு சமூகத்தையே குற்றப் பரம்பரையினர் என்று முத்திரை குத்தி, அவர்கள் வாழ்ந்த ஊரையே பிரிட்டிஷ் அரசாங்கம் சிறையாக்கிய கொடூரங்கள் பெரும்பாலும் பதிவு செய்யப்படவேயில்லை. 1930-களில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் கைரேகைகள் பதியப்பட்டு, தடுப்புக் காவலில் கண்காணிக்கப்பட்ட அதிர்ச்சிகரமான தகவல்களை இந்த நூல் முன்வைக்கிறது.

1914-ம் ஆண்டு மே ஐந்தாம் நாள் மதுரை மாவட்டம் கீழ்க்குடியில் முதல் கைரேகைப் பதிவு செய்யப்பட்டு, ஒரு நூற்றாண்டு ஆகிறது. காலனிய காலம் தொடங்கி நவீன அரசு வடிவங்கள் மக்கள் சமூகத்தின் மீது என்னென்ன கண்காணிப்புகளை நிகழ்த்த முடியும் என்பதற்கான ஆவணமாக இந்நூல் அமைந்துள்ளது.

குற்றப் பரம்பரை அரசியல்

பெருங்காமநல்லூரை முன்வைத்து தொகுப்பாசிரியர்: முகில்நிலவன்

தமிழாக்கம்: சா.தேவதாஸ்

வெளியீடு: பாலை வெளியீடு, 2, முதல் தளம், மிதேசு வளாகம், நான்காவது நிறுத்தம், திருநகர், மதுரை-6, விலை: ரூ. 300/- தொலைபேசி: 9842265884

SCROLL FOR NEXT