இலக்கியம்

பளிச்! - பறக்கிறது பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்...

செய்திப்பிரிவு

நக்கீரனில் கங்கை அமரன் எழுதிய ‘பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்’ புத்தகமாக வெளியாகியிருக்கிறது. கங்கை அமரனை எப்போதும் இளையராஜாவோடு வைத்துப் பார்ப்பதே பலருக்கும் வழக்கம். அவரைத் தனியொரு ஆளுமையாக இந்தப் புத்தகம் உணர வைக்கிறது. ஒரு கலைக் குடும்பத்தின் செல்லப்பிள்ளையாகவும் கடைக்குட்டியாகவும் பிறந்த நினைவுகள், திரையுலக அனுபவங்கள் என்று சுவாரசியமாக விரியும் இந்தப் புத்தகம் இளையராஜாவும் இதுபோல் விரிவானதொரு தன்வரலாற்று நூலை எழுத வேண்டும் என்ற ஆவலை நம்முள் தூண்டிவிடுகிறது. புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் புகைப்படங்கள் நம்மைக் காலத்தில் பின்நோக்கி இழுத்துச் செல்கின்றன.

பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்
கங்கை அமரன்
ரூ. 300 (இரண்டு பாகங்களும் சேர்த்து)
நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு.

SCROLL FOR NEXT