இலக்கியம்

நூல் நோக்கு: எழுத்து ருசிக்கு இன்னொரு சான்று

செய்திப்பிரிவு

கரிசல் இலக்கிய முன்னோடியான கி.ரா எழுதிய காதல் கதைகள், நடைச்சித்திரங்கள், நாட்டார் கதைகள் என பலவகைக் கதைகள் கொண்ட தொகுப்பிது. கையெழுத்துப் பிரதியாகவே இருந்த சில கதைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கதைகளினூடாக, கிராமத்து சம்சாரியின் வாழ்க்கையைச் சொல்லிச் செல்லும் கி.ரா., அதன் வழியே வாழ்வின் சாளரத்தையும் நமக்காகத் திறந்து காட்டுகிறார்.

‘ஆற்றுக்கு அந்தப் பக்கமொரு ஊர்; அந்தூர் என்று பெயர்.

அதே ஆற்றுக்கு இந்தப் பக்கம் ஒரு ஊர்; இந்தூர் என்று பெயர்.

இந்த ரெண்டு ஊர்களுமே ஒரே பக்கமாக இருந்து தொலைக்கப்படாதா என்று சில சமயம் தோன்றும்’ என்று முதல் கதையின் தொடக்கமே, அவரது எள்ளல் மிக்க கதைசொல்லலுக்குள் நம்மை உள்ளிழுத்துப் போகிறது. ‘பாவக்காய்க் கசப்பு, உணவில் ருசிப்பது போல, வேப்பிலையின் மணம் சுவாசிக்க இதமாக இருந்தது’ என்றெழுதிச் செல்லும் கி.ரா.-வின் எழுத்து ருசிக்கு இன்னொரு சான்றாக இந்நூலிலுள்ள கதைகள் உள்ளன.

- மு.முருகேஷ்

SCROLL FOR NEXT