இலக்கியம்

நூல் நோக்கு: இடியோசை நடுவே சில மின்னல் கீற்றுகள்

செல்வ புவியரசன்

இதுவரை நூல்வடிவம் பெற்றிராத ஜெயகாந்தனின் பத்திரிகை நேர்காணல்களும் வாசகர் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களும் அடங்கிய தொகுப்பு இது. பி.எஸ். ராமையா மணிவிழாவில், தமிழில் நாடக இலக்கியம் இல்லை என்று ஜெயகாந்தன் பேசியதன் தொடர்ச்சியாக அது குறித்து அவர் அளித்த நீண்டதொரு நேர்காணலின் கட்டுரை வடிவம் இத்தொகுப்பின் சிறப்பம்சம்.

உள்ளீடற்ற சினிமாவின் மிகைமிஞ்சிய தாக்கம், நேரம் கொல்லும் நோக்கம் என்று இலக்கியத்தின் நிழல் படியாதிருக்கும் நாடக உலகத்தைக் கண்டிக்கிறார் ஜெயகாந்தன். மிகச்சில விதிவிலக்குகளைத் தவிர்த்து அவரது கண்டனங்களுக்கு இன்னும் அவசியம் இருக்கிறது.

நூலில் அடங்கியுள்ள மற்ற கேள்வி பதில்கள் ஜெயகாந்தனின் கம்யூனிச இயக்க ஈடுபாடு, அவரது திரைப்பட முயற்சிகள், நடிகை லட்சுமி பற்றிய அபிப்ராயம், எழுதிய கதைகளின் பாத்திரங்கள், காரல் மார்க்ஸ், காந்தி, பாரதி, சமயம், தத்துவம், சங்கீதம் என்று பல்வேறுபட்டவை. ஜெயகாந்தனின் உரத்து ஒலிக்கும் கோடை இடிமுழக்கத்தின் நடுவே அவ்வப்போது மின்னல் கீற்றுகளும் எட்டிப் பார்க்கின்றன.

SCROLL FOR NEXT