இலக்கியம்

இப்போது படிப்பதும், எழுதுவதும் - வண்ணநிலவன்

செய்திப்பிரிவு

தஸ்தாயெவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ தமிழ் மொழிபெயர்ப்பைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ரஷ்ய மொழியிலிருந்து அரும்பு என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார். காலச்சுவடு வெளியிட்டுள்ளது. இந்த நாவலைப் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் படித்தபோது பிரமாதமாகப்பட்டது. இரண்டாம் முறை படிக்கும்போது அவ்வளவு திருப்தியாக இல்லை. தஸ்தாயெவ்ஸ்கியின் கதை சொல்லும் பாணி பழையதாகத் தோன்றுகிறது.

ரொம்பவும் இழுக்கிறார். எம்.எல் என்ற பெயரில் ஒரு நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். சாரு மஜூம்தாரின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு சி.பி.எம்(எல்) கட்சியில் சேரும் தமிழ் இளைஞனின் கதை. ஒருகட்டத்தில் அவன் அவநம்பிக்கையில் வெளியேறுகிறான். இப்படிப் போகிறது கதை!

SCROLL FOR NEXT